fbpx

150 பணியிடங்கள்… மத்திய அரசின் நிறுவனத்தில் B.E., B.Tech முடித்த நபர்களுக்கு வேலை….! உடனே விண்ணப்பிக்க… முழு விவரம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer – I, Project Engineer – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.Sc, B.E அல்லது B.Tech Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

01.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC 3 ஆண்டு, SC / ST 5 ஆண்டு மற்றும் PWD 10 ஆண்டுகள் என பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் 400ரூபாய். பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 26-ம் தேதி கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web Ad EM-English-19-07-22.pdf

Also Read: 12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு… ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket…! எப்படி டவுன்லோட் செய்வது…?

Vignesh

Next Post

யாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் மோடி..? பிரதமரின் அழைப்புக்காக காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

Wed Jul 20 , 2022
சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை பாஜக தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தார். இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் […]

You May Like