fbpx

BIG BREAKING | செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!!

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் பெறுவார்கள். இந்த போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரத்தன் டாடாவின் ரூ.38,000 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆளப்போகும் வாரிசுகள் யார் தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Tamil Nadu Government has announced Diwali Bonus for all Government PSU employees.

Chella

Next Post

மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் கருவி… விலையும் ரொம்ப குறைவு…! இனி MRI, CT ஸ்கேனுக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை..!!

Thu Oct 10 , 2024
IIT has created a cheap device to detect breast cancer, now there is no need to spend money on MRI and CT scan!

You May Like