fbpx

“மே மேனு கத்தினாலும் 10 ஓட்டும் தேறாது’ – பாஜக அண்ணாமலையை கலாய்த்த எஸ்வி.சேகர்.!

தமிழகத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில் தமிழக அரசியல் வட்டாரமும் சூடு பிடித்திருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்த அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் மத்திய அரசின் குழு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு மு க ஸ்டாலின் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். முதல்வருக்கு தமிழக மக்களின் மீது அக்கறை இல்லை எனவும் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசி அண்ணாமலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சரி செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை குறை கூறி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் வெள்ள நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் பிரயோஜனம் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் மாநில அரசு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளாததால் மத்திய அரசு அனைத்தையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டியை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த நடிகர் எஸ்வி சேகர் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர் திமுக செய்வதை போன்று தான் அசட்டு ஐபிஎஸ் அதிகாரியும் செய்து வருகிறார். மாநில அரசை குறை சொல்வதை தவிர 10 பைசா மக்களுக்கு நிதியாக கொடுத்திருக்கிறாரா.? என்னதான் மே மேனு கத்தினாலும் மே மாசம் பத்து ஓட்டு கூட தேறாது என தனது பதிவில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Next Post

"வெளிய சொல்லாத"! வேனிற்குள் கொடூரம்.! பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12 வயது சிறுமி.! டிரைவர், பிரின்சிபால் கைது.!

Mon Dec 25 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி வேன் டிரைவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்திருக்கிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை […]

You May Like