fbpx

பரபரப்பு…! பாஜக தனித்து போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும்…! அரசியல் விமர்சகர் கருத்து…!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக போட்டியிடுவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது பாஜக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறது. பாஜக தனித்துப் போட்டியிட்டால் அது திமுகவிற்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீ ராம் சேஷாத்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பாஜக வெற்றி பெறும் பலம் இப்போது இல்லை, பாஜக போட்டியினால் ஒட்டுபிளவு ஏற்பட்டு அதிமுக தோற்று போகும், திமுக மக்களிடம் இன்னும் செல்வாக்ககாக உள்ளது பிம்பம் கட்டமைக்கப்படும். பாஜகவுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை.

ஆனால் கத்துகுட்டி இணைய தள சங்கிகள் உணர்சிவயபட்டு பதில் அளிப்பது அவர்களின் அறியாமையை மட்டுமே காட்டுகிறது. உபிகள் பதில் கதறல் ஆச்சர்யம் இல்லை, பாஜக களம் இறங்கினால் காங்கிரஸ் வெற்றி உறுதி, பாஜக போட்டியிடவில்லை என்றால் அவர்கள் பாடு திண்டாட்டம் என பதிவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியாவில் தான் டிஜிட்டல் பேமேண்ட் அதிகம்.. மத்திய அமைச்சர் தகவல்..

Sat Jan 21 , 2023
கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த […]

You May Like