fbpx

மதுரையில் பரபரப்பு…! பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர விசாரணை…!

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சக்திவேலை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் எனக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூர கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மதுரையில் பாஜக நிர்வாகி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

புற்றுநோய் தடுப்பு மருந்துகள் உருவாக்கம்..! ரஷ்யா அதிபர் புதின் முக்கிய அறிவிப்பு..!

Thu Feb 15 , 2024
புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் நிலைக்கு ரஷ்யா நெருங்கிவிட்டது என்றும் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வகையில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர் என்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டுகளில் உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக ரஷ்ய அரசு, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அறிவித்தது. தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik […]

You May Like