fbpx

“திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு..” பத்திரிக்கையாளர்கள் குறித்து அண்ணாமலை நெத்தியடி பதிவு.!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை வில்லங்கமான கருத்துக்களை பேசி விமர்சனங்களில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்தார்.

இந்தப் பேட்டியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களை கடுமையான சொற்களால் அண்ணாமலை விமர்சித்து இருந்தார் இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து கண்டனக் கூட்டம் நடத்த பத்திரிக்கையாளர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது. இந்த கண்டன கூட்டத்திற்கு எதிராக தனது ‘X’ வலைதள பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் அண்ணாமலை.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் ” திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்காக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் இன்று ஒன்று கூடி எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் எனக்கு எதிராக போராட்டம் செய்வது மூன்றாவது முறை என்று நினைக்கிறேன். எனக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை பதக்கங்களாக நினைத்து பெருமைப்படுகிறேன் .

இவர்கள் நடுநிலையான பத்திரிக்கையாளர்களாக இல்லாமல் திமுகவின் செய்தி தொடர்பாளர்கள் போல செயல்பட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக சில காட்சிகளை இந்தக் காணொளி மூலம் பதிவேற்றி உள்ளேன். உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களுடன் தோள் கொடுத்து நிற்கிறேன் இதுபோன்ற திமுக அடிவருடிகளை ஒரு பொருட்டாகவும் கருதுவதில்லை என பதிவு செய்துள்ளார்.

Next Post

பேரதிர்ச்சி..!! மண்ணில் புதைந்த தங்கச் சுரங்கம்..!! 73 பேர் பலி..!! 130-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு..!!

Thu Jan 25 , 2024
ஆப்பிரிக்க நாடான மாலியில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியின் கங்காபா மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி, திடீரென இடிந்து விழுந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது பெரிய சத்தம் கேட்டதாகவும், பூமியே அதிர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இத்தகவல் கிடைத்த உடன் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது […]

You May Like