fbpx

பாஜக தலைவர் கொலை… 16 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை…!

தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, குடகு, மங்களூரு உட்பட 12 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் 40‍-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.

English Summary

BJP leader’s murder… NIA officers conduct raids at 16 places

Vignesh

Next Post

நைட் ஷிப்ட் பார்ப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான snacks இது தான்..

Fri Dec 6 , 2024
best-snacks-for-night-shift-workers

You May Like