fbpx

பிரேக்கிங் பிரச்னைகளுக்கு மட்டும் அதிக நிவாரணமா? – வானதி சீனிவாசன் காட்டம்

திராவிட மாடலில் ’கிக்’ தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் எனவும், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது, கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது, எனது தொகுதிக்கு வர வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய விடீயோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள். ஜனநாயக தன்மையோடு இயங்காத சட்டபேரவையாக சவாலோடு பேச வேண்டியதாக இருக்கிறது. நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என நடிகர் விஜய் சொன்னதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

படித்தவர்களைவிட மக்களுக்காக உணர்வுபூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உயர்கல்வி துறையை பொறுத்தவரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கவர்னருக்கு எதிராக மிக தனிப்பட்ட முறையில் எதிரான மனநிலையோடு பேசுவது உயர்கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நானா, நீயா என்கிற வகையில் மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. கவர்னர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்க்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு, அவருக்கு எதிராக பேசுவது உயர்கல்விதுறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய சூழல் உள்ளது.

திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Read more | நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் திடீர் ஆலோசனை!! என்ன காரணம்?

English Summary

BJP National Women’s Team President Vanathi Srinivasan has said that they think ‘kick’ is important in the Dravida model and everyone should be equal in declaring relief.

Next Post

மூளை உண்ணும் அமீபாவால் 2 சிறுவர்கள் பலி!! கேரளாவில் சோகம்!

Mon Jul 1 , 2024
Amoebas can enter the brain through the nose when people swim in contaminated warm, fresh water. This rare disease is currently spreading in Kerala.

You May Like