fbpx

I.N.D.I.A | “விரைவில் தாமரை துடைத்தெறியப்படும்”… சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை.!!

I.N.D.I.A | மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி விரைவில் துடைத்தெறியப்படும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா(I.N.D.I.A) என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது .

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இந்தியாவிலேயே அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் சமாஜ்வாடி மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பங்கீடு தொடர்பாக சில முரண்கள் இருந்த போதும் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய பின் தொகுதி பங்கீடு சமூகம் ஆக முடிவடைந்தது. உத்திர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுவதால் போட்டியிடும் கட்சியினர் ஓய்வின்றி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக ஆட்சி புடைதெரியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் விவசாயிகள் மற்றும் இளைஞர்களிடையே இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது. பாஜக கட்சி கொள்ளை அடிப்பதையும் பொய் சொல்வதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கிறது. வர இருக்கின்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று தாமரை துடைத்தெறியப்படும் என தெரிவித்துள்ளார்.

Read More: Lok Sabha | “குடும்ப அரசியல், ஊழல்,மோசடி இதுதான் திமுக அரசின் சாதனை” – நெல்லை பிரச்சாரத்தில் மோடி குற்றச்சாட்டு.!

Next Post

GOAT First Single : 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை..! "அரபிக் குத்து" சாதனையை முறியடித்த "விசில் போடு"..!

Mon Apr 15 , 2024
கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாக விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களின் வரிசையில் தளபதி விஜயும் சேர்ந்திருக்கிறார். புதிய கட்சியை ஆரம்பித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த இடைவெளியில் ஒப்புக்கொண்ட ஒரு சில திரைப்படங்களை வேகமாக முடித்துக்கொடுத்தும் வருகிறார். […]

You May Like