fbpx

கெட்ட கொழுப்புகளை ஓட ஓட விரட்டும் காராமணி.! கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.!

பயிறு வகைகள் என்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை ஆகும். தட்டைப் பயறு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருப்பதோடு பல உடல் உபாதைகளுக்கும் நிவாரணமாக செயல்படுகிறது. காராமணி என்று அழைக்கப்படும் தட்டைப்பயிரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனிசு, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது .

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் தட்டைப் பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தட்டைப் பயிரில் ஏராளமான ஆன்ட்டிஆக்சிடென்ட்களும் வைட்டமின்களும் நிறைந்து இருக்கின்றன. இவை உணவில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி புற்றுநோய் செல்கள் உடலை தாக்காமல் பாதுகாக்கிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கும் தட்டைப்பயிரை பயன்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

இவற்றில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காராமணியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது. மேலும் இந்த வைட்டமின்கள் முகத்தில் இருக்கும் பளபளப்பிற்கும் கூந்தல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காராமணி புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு பயிர் வகையாகும். இவற்றை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தசைகள் வளர்ச்சிக்கும் உடல் உறுதிக்கும் நன்மை பயக்கிறது.

Next Post

சாப்பிடும் போது செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? உங்களுக்குத்தான் மருத்துவர்களின் எச்சரிக்கை.!

Fri Dec 29 , 2023
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அனைத்துமே அவசரமாகிவிட்டது. நிம்மதியாக சாப்பிட கூட முடியாமல் அனைவரும் வேலை, பணம் என்று கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வருகின்றனர். இன்று பெரும்பாலானவர்கள் சாப்பிடும் போது செல்போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது தங்களது மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஒரு விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பழக்கத்தால் உடலுக்கு பல்வேறு விதமான தீமைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் நம் உடலுக்கு […]

You May Like