fbpx

விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!! Dolly Chai Wala-வை வச்சி டூப் போட்ருக்காங்க..!!

கோட் படத்தில் De aging டெக்னாலஜி மூலம் இளமையாக காட்டப்பட்டுள்ள விஜய்யின் லுக்கை பலரும் பங்கமாய் கலாய்த்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இளமையான தோற்றம் என்பதால், டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி உள்ளனர்.

இதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து இந்த பணிகளை செய்துள்ளார் வெங்கட் பிரபு. இந்நிலையில், கோட் படத்தின் 3-வது சிங்கிள் பாடலான ஸ்பார்க் என்கிற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் விஜய்யின் டீ ஏஜிங் லுக் இடம்பெற்று இருந்தது. அந்த லுக் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. டீ ஏஜிங் லுக்கில் நடிகர் விஜய்யை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார். அதில், விஜய்யின் தோற்றத்தை பார்த்த அவர், பாவம் விஜய், மொக்கை டெக்னாலஜி என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், விஜய்யின் டீ ஏஜிங் லுக்கை பார்த்ததும் அஜித் வெங்கட் பிரபுவுக்கு கைகொடுத்து கலக்கிட்டீங்க சகல என சொல்வது போன்ற மீமை ஷேர் செய்துள்ளார். இதையெல்லாம் விட, வட இந்தியாவில் புகழ்பெற்ற டீக்கடை காரரான டோலி சாய் வாலாவின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா’ என்று பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Read More : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்மையா..? அமைச்சரவை விரைவில் மாற்றம்..? முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி பதில்..!!

English Summary

Vijay’s look, which has been shown to be youthful through de-aging technology in the film Code, has been popularized by many.

Chella

Next Post

இந்திய தபால் துறையில் 44,228 காலி பணியிடங்கள்..!! 10th போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க..

Mon Aug 5 , 2024
India Post GDS Recruitment alert 2024: Apply for 44,228 vacancies online

You May Like