fbpx

#Job: ரூ.25,000 ஊதியத்தில் BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-10/bc-supervisor-detailed-notification-15-04.pdf

Vignesh

Next Post

3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால்..!! குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க..!!

Fri Nov 17 , 2023
கோவை மாவட்டத்தில் மழை பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், பாக்டீரியா பரவல் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் காரணமாகக் […]

You May Like