fbpx

பயங்கரம்..! முட்புதரில் இளம் பெண்ணின் சடலம்… மேற்கு வங்கத்தை உலுக்கிய மற்றொரு சம்பவம்…!

கொல்கத்தாவின் ஆனந்த்பூர் பகுதியில் புதர்களுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி அவரின் உடல் கல்லூரி மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தது. பின்னர் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

கல்லூரி முதல்வர் சந்தீப் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்க அரசு அவரை வேறு கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து சந்தீப் கோஷை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இதன்பிறகு தலைமறைவாக இருந்த சந்தீப்பை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் முட்புதரில் பெண் சடலம் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கொல்கத்தாவின் ஆனந்த்பூர் பகுதியில் புதர்களுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பெண் கற்பழிக்கப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை, அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து கொல்கத்தா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

English Summary

Body found inside bushes in Anandpur area of ​​Kolkata, woman suspected to have been raped first

Vignesh

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை..!! மூடி மறைக்கப்படும் உண்மைகள்? வங்காள வரலாற்றில் கருப்பு பக்கம்..!!

Wed Aug 21 , 2024
Kolkata Doctor’s Rape and Murder: A Dark Chapter in West Bengal’s Governance

You May Like