கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார்.
வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் கிடைக்கும் என்று தாயை சிறுவன் அழுது கொண்டே திட்டுகிறான்.
இந்த நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அனைவரும் சமாதானம் படுத்த முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து சிறுவனின் தாயார் இந்த மரத்தை வெட்டியதற்காக நான் 10 மரங்களை நடுகிறேன் என்று சிறுவனிடம் உறுதி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவன் தன்னுடைய அழுகையை மெல்லமாக நிப்பாட்டினான். மேலும் இந்த சிறுவனின் இந்த வயதிலே இருக்கும் பொறுப்பை பார்த்து வியந்த மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது.