fbpx

காலை உணவு திட்டம்…! இவர்களும் பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும்…! தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு…!

காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் ஆய்வு செய்யலாம் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசால் உருவாக்கப்பட்ட, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுப்புறத் துாய்மை, கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.

ஆய்வுகளுக்காக பள்ளிப் பார்வை, போன் செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வு செய்வதையும், வகுப்பறைகளை கண்காணிப்பதையும், போன் செயலி வழியே உறுதி செய்யலாம்.

Vignesh

Next Post

தூள் அறிவிப்பு...! மனைப்பிரிவு வரன்முறை... 2024 பிப்ரவரி வரை கால அவகாசம் நீட்டிப்பு...! முழு விவரம்

Fri Sep 8 , 2023
மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் மனைப்பிரிவிற்கும் மற்றும் மனை உரிமையாளர்களிடமிருந்து […]

You May Like