அமலாக்கத்துறை காவல் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ்காவில் எடுத்ததற்கான ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுயநினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போன நிலையில், இன்று அவர் சுயநினைவோடு இருப்பதால் அவரிடம் நீதிமன்ற ஊழியர்கள் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பதற்கான ஒப்புதலில் அவரிடம் கையெழுத்து வாங்கினர்.