fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது…..! லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு……!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் நீதிபதி நிஷா பானு அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி இந்த மனு தள்ளுபடி செய்ய வேண்டியது என கூறி இருக்கிறார்.

ஆனால் இந்த வழக்கு மீண்டும் 3வது நீதிபதி முன்பு விசாரணைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த 3வது நீதிபதி யார் என்பது இதுவரையில் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ததை தொடர்ந்து, திமுக தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கானவே அமைச்சருக்கு நெஞ்சுவலி வந்தாவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

Next Post

விருதுநகரில் திடீர் சாரல் மழை…..! பொதுமக்கள் மகிழ்ச்சி…..!

Tue Jul 4 , 2023
விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிதளவில் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய […]

You May Like