அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.. இந்த வழக்கில் தனி நீதிபதிஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொதுக்குழு தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளையும் தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.. அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும்.. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது.. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டு.. ஆனால் அது மீறப்பட்டுள்ளது.. இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்..
அப்போது, இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போது, ‘இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் அவசரப்படுவது ஏன்..” என்று கேள்வி எழுப்பினர்.. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவு வரை தேர்தல் நடத்த மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பு உறுதியளித்தது.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிப்பதாக கூறிய நீதிபதிகள் தசரா விடுமுறைக்கு பிறகு வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்..