பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீது பெண் பத்திரிகையாளர் சந்தியா புகார் அளித்தார். அதில், கோலமாவு சந்தியா என்ற பெயரில் தன்னைப் பற்றி இழிவாக கட்டுரை எழுதி, சவுக்கு சங்கர் இணையதளத்தில் வெளியிட்டார். இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அனுமதியின்றி பின்தொடர்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு சொந்தமான வீடு, அலுவலங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தேனி காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Read More : கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது ஏன்..? மருத்துவர் சொல்லும் காரணம்..?