fbpx

Breaking News: அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா…..? இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது.

அதாவது நீதிபதிகள் நிஷா பானு பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியே அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில், இன்று இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

இதற்கு நடுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலான இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை எட்டி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இதில் விசாரணைகள் அனைத்தும் கடந்த மாதம் 27 ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது.

ஆகவே இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது ஏற்கனவே செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் திமுகவின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு எதிர்தரப்பில் அமலாக்கத் துறை சார்பாக துஷார் மேத்தா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

அதன் பிறகு மீண்டும் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி மாதங்களை முன் வைத்திருக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துஷார் மேத்தா தரப்பில் பதில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்று விசாரணை முடிவுற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

செந்தில் பாலாஜி மனைவி இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்து இருப்பதாவது, செந்தில் பாலாஜியின் கைது குறித்து முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஏற்கனவே ஜூலை மாதம் 12ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத்துறை முறையாக பதிலளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியின் மூலமாக செந்தில் பாலாஜியின் குடும்பத்திற்கு தகவல் அளித்தோம் என்று அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று மேகலா தரப்பு தெரிவித்து இருக்கிறது. ஆனால் இதனை நீதிமன்றம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை.

அதேபோல செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 8 நாட்கள் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது என்பதையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

அதோடு செந்தில் பாலாஜியின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று செந்தில் பாலாஜியின் மனைவி கூறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், போது ஆதாரங்கள் உள்ளதால் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இதனை கருத முடியாது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

Next Post

”நா ரெடிதான்” பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஜிபி முத்து..!! லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோ இதோ..!!

Tue Jul 4 , 2023
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் ஒரு வாரம் வரை இருந்த இவர் அதன் பிறகு வெள்ளித்திரையிலும் சில பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். மேலும், அதே தொலைக்காட்சி சேனலில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் […]

You May Like