விருதுநகர் மாவட்டம், விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் காவல்துறையின் இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 15க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடைபெற்றது.. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..