fbpx

#BREAKING | ”தமிழக வெற்றி கழகம்”..!! விஜய்யின் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் ”தமிழக வெற்றி கழகம்” என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஒரு செயலி நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்த நிலையில், நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்களை கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அரசியல் சார்பின்றி செயல்படும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர், ஒடுக்கப்பட்டோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்து தன்னோடு செயல்படுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

#BREAKING | தமிழ்நாட்டில் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்"..!! முதல் அறிக்கையிலேயே அட்டாக் செய்த விஜய்..!!

Fri Feb 2 , 2024
நடிகர் விஜய் புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசியல் கட்சி பதிவு செய்ததும் முதன்முதலாக விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம்” பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போதைய அரசியலில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த […]

You May Like