தூத்துக்குடி அண்ணாநகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். ராம்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வந்துள்ளனர். முருகேசன் சகோதரி, தனது வீட்டை வாங்கியதில் இருந்து இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் ராம்குமாரை அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். மாரியம்மாளின் கணவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது அவரை விரட்டி அடித்தனர்.
முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது தங்கை மாரியம்மாவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரையும் தேடி வருகின்றனர்.