fbpx

பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டம் அறிமுகம்… ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாலக்காடு ஆகியவை இணைந்து கூட்டுக் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் பகிரப்பட்ட வளங்கள், ஆராய்ச்சிக்கான உள்ளகப் பயிற்சிகள், கோடைகாலப் பாடத்திட்டங்கள் என மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கைகோர்த்துள்ளன.

ஐஐடி மெட்ராஸ்-ல் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பட்டப்படிப்பு, ஐஐடி பாலக்காட்டில் இளங்கலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இரு கல்வி நிறுவனங்களின் பலத்தையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த ஜூன் 2020-ல் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்ற நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனித்துவமான இப்பாடத்திட்டத்தில் உயர்தரமான பயிற்சியுடன் பாடங்களின் உள்ளடக்கங்கள் ஆன்லைன் மூலமும், தனிநபர் மதிப்பீடுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பாடத்திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று துடிப்பான மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள்:

ஐஐடி பாலக்காடு படிப்புகளில் இருந்து கிரடிட் பரிமாற்றம்: ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மாணவ-மாணவிகள், ஐஐடி பாலக்காட்டில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் தங்கள் கிரடிட் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்

ஐஐடி பாலக்காடு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐ அணுகுதல்: ஐஐடி பாலக்காடு இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.அத்துடன் ஐஐடி பாலக்காடு மாணவர்கள் இங்குள்ள அதிநவீனத் திறன்களுக்கான அணுகலையும் பெற முடியும்.

கூடுதல் முன்முயற்சிகளுக்கான ஆதரவு: மாணவ-மாணவிகள் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், இதர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உதவிகரமாக இருக்கும்.இருதரப்பு பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளல், நடைமுறைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை வளப்படுத்திக் கொள்ள இரு கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த ஒத்துழைப்பு வகைசெய்கிறது. இரண்டு ஐஐடிகளின் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு வலுவான கல்விச் சூழலை உருவாக்குவதை இக்கூட்டுமுயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

English Summary

BS degree curriculum introduced… Super announcement for IIT Madras students

Vignesh

Next Post

புரோ கபடி 2024!. பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி!.

Sun Nov 17 , 2024
Pro Kabaddi 2024!. Bengal Warriors beat Tamil Thalaivas amazing victory!.

You May Like