fbpx

BSNL சூப்பர் அறிவிப்பு… ஃபேன்சி எண்களை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 19.12.2024 ஆகும்.

‘வேனிட்டி எண்கள்’ என்ற பெயரில் மின் ஏலத்தின் மூலம் கவர்ச்சிகரமான எண்களை பிஎஸ்என்எல் விற்பனை செய்து வருகிறது. எவரும் தங்களுக்கு விருப்பமான ஆடம்பரமான மொபைல் எண்ணைப் பெற மின் ஏலத்தில் பங்கேற்கலாம். போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் வகைகளில் வேனிட்டி எண்கள் கிடைக்கின்றன. இப்போது, ஆன்லைனில் வேனிட்டி எண்ணைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் eauction.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். இந்த தளத்தில் உள்ள “Login/Register” என்பதைக் கிளிக் செய்யவும் உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடவும். இப்போது உங்கள் உள்நுழைவு விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு வெற்றிகரமாக உள்நுழைக. உங்கள் முன் காட்டப்படும் பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும். இப்போது “Continue to card” என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும் (திரும்பப் பெறத்தக்கது) அடுத்து நீங்கள் விரும்பிய எண்ணை ஏலத்தில் எடுப்பதற்காக குறைந்தபட்ச ஏலத் தொகையைக் குறிப்பிடவும்.

ஒவ்வொரு ஃபேன்ஸி எண்ணுக்கும் 3 பயனாளர்கள் BSNL தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள பயனாளர்களுக்கு அவர்களின் பதிவுக் கட்டணம் 10 நாட்களுக்குள் அதே ஆன்லைன் மூலம் திரும்ப செலுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயனாளர்கள் குறிப்பிட்ட ஏலத் தொகையின்படி H1, H2, H3 என வகைப்படுத்தப்படுவார்கள். அதிக ஏலம் எடுப்பவருக்கு எண் ஒதுக்கப்படும். அவர் அதை எடுக்க விரும்பவில்லை என்றால், அடுத்தவருக்கு அந்த எண்ஒதுக்கப்படும். மின் ஏலத்தில் நம்பரை வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் எண் வழங்கப்படும்.

English Summary

BSNL Super Announcement… You can apply online to get fancy numbers

Vignesh

Next Post

நெயில் பாலிஷ் அணிவதால், உங்களின் மூளை பாதிக்கப்படுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

Sun Dec 15 , 2024
hazardous of using nail polish

You May Like