fbpx

சென்னையில் திடீரென பேருந்துகள் நிறுத்தம்- பயணிகள் கடும் அவதி!

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

இந்நிலையில், அரசு அங்கிகரிக்கப்பட ஏஜென்சிகள் ஒப்பந்த்தை கோரலாம் என போக்குவரத்துதுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லவன் இல்லம் , சைதாப்பேட்டை , ஆலந்தூர் ஆவடி என சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் ஏஜென்சி மூலமாக தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஆள் சேர்க்கும் முயற்சியை முற்றிலும் கைடவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்திவருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

Baskar

Next Post

6 ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.819 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

Mon May 29 , 2023
ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் தனது 2 நாள் சிங்கப்பூர் […]

You May Like