தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் 11,12 ஆகிய தேதிகளில் ஓரு சில இடங்களில் மிகக் கனமழைபெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 11,12, 13 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அது புயலாக மாறாது என தெரிவித்துள்ளார். அதே வேளையில் 9ம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் மழை படிப்பிடயாக மிகக் கனமழையாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.