fbpx

“லோக்சபா தேர்தலுக்கு முன் ‘CAA’ அமல்படுத்தப்படும்..” “நம் இஸ்லாமிய சகோதரர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்” – உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி.!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்படும் என கூறினார் . மேலும் முஸ்லிம் சகோதரர்களை அரசியல் லாபத்திற்காக தவறாக வழி நடத்துகிறார்கள் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையை பறிப்பதும் அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று தெரிவித்தவர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் அகதிகளாக இந்தியா வரும்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது நாட்டு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவை ஏற்படுத்தி இருக்கிறது எனக் கூறினார். இதன் மூலம் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 370 இடங்களுக்கு மேல் வெற்றியை வழங்கி பொதுமக்கள் ஆசீர்வதிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் 2024 ஆம் வருட பொது தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தெரிவித்த அவர் இது காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இதில் சஸ்பென்ஸ் எதுவும் இல்லை என தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் தங்களது இருக்கையில் அமர போவதை உணர்ந்ததாகவும் கூறினார். வெற்றிக் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய அமித் ஷா இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உட்பட பல தலைவர்களால் கையொப்பம் இடப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்துகளில் இருக்கக்கூடிய ஒன்று எனக் கூறினார். ஆனால் சமாதானம் அடிப்படையில் காங்கிரஸ் அதனை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் பல சமூக மாற்றங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.இது அனைத்து மன்றங்களிலும் விவாதிக்கப்படும் மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் குறியீடுகள் இருக்க முடியாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Post

விஜய்யின் முதலமைச்சர் கனவு..!! ரஜினிகாந்த் சொன்ன பதில்..!! அடுத்த படம் இவருடன் தான்..!!

Sat Feb 10 , 2024
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் 3-வது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் […]

You May Like