fbpx

கடுகு எண்ணெயால் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் சரியாகுமா….?

பொதுவாக, நம்முடைய தமிழகத்தில் பாரம்பரியமாக, குழம்பு தாளிப்பதற்கு கடலை எண்ணெயையும், தலையில் தடவுவதற்கு தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துவோம். அதையும் தவிர்த்து, உடலில் அதிக அளவில் சூடு ஏற்பட்டால், அதனை தவிர்ப்பதற்காக நல்லெண்ணையை தடவுவது வழக்கம்.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து, வட மாநிலங்களில் ஒரு புதுமையான பழக்கம் இருக்கிறது. அது தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமானால் புதுமையான பழக்கம் என்று சொல்லலாம். ஆனால் வடமாநிலங்களை பொறுத்தவரையில், அது ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்டது.

இதுவரையில் கடுகு எண்ணெய் என்ற ஒரு எண்ணெய்யை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஆம், இந்த கடுகு எண்ணெய் தான் வட மாநிலங்களில் சமையலுக்கும் பயன்படுத்துவார்கள், அதே போல உடம்பில் தேய்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்துவார்கள், மேலும், பல்வேறு மருத்துவ குணங்கள் இந்த கடுகு எண்ணெயில் இருப்பதாக கூறப்படுகிறது.

அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த கடுகு எண்ணெயில் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான், இதனை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதேபோல இந்த கடுகு எண்ணெயை நாம் பயன்படுத்தி வந்தால், எப்போதும் இளமையான தோற்றத்தை பெறலாம். இன்றளவும் வடமாநிலத்தவர்களை பார்த்தோமானால், அவர்களுக்கு வயதானாலும் அவர்களின் தோற்றம் இளமையாக இருப்பதை போன்றே தென்படும்.அதற்கு முக்கிய காரணம், அவர்கள் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்துவது தான் என்று கூறப்படுகிறது.

அதோடு, இந்த கடுகு எண்ணெய் நம்முடைய உதடு உலர்ந்து போகாமல், எப்போதும், ஈரப்பதத்தோடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. அதேபோல நாம் வெயிலில் அதிக நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டாலும், இந்த கடுகு எண்ணெய் நம்மை வெயிலின் தாக்கத்திலிருந்து வெகுவாக பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களும் இதனை பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சனை உடனடியாக முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதோடு, தலையில் அதிக அளவில் பொடுகு காணப்பட்டால், இந்த கடுகு  எண்ணெயை பயன்படுத்துவதன் மூலமாக, பொடுகு முற்றிலுமாக ஒழிந்து போகும்.

அதேபோல கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் மற்றும் உடல் சூட்டினால் ஏற்படும் வெடிப்புகளையும் இந்த கடுகு எண்ணெய் சரி செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த கடுகு எண்ணெயை தடவி வந்தால், பாதம் எப்போதும் வழவழப்பான நிலையிலே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல நாம் எப்போதும் நம் உடல் சூட்டை தணிப்பதற்காக பயன்படுத்தும் நல்லெண்ணெய்யை தவிர்த்து, கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், நம்முடைய உடலில் இருந்து சூடு வெளியேறுவதை நம்மால் நன்றாக உணர முடியும் என்று கூறப்படுகிறது.

Next Post

”தினமும் 100 ஆபாச மெசேஜ்கள்”..!! ”தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது”..!! சீமானை எச்சரித்த வீரலட்சுமி..!!

Wed Sep 20 , 2023
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவி வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் இருந்து சீமானுக்கும், வீரலட்சுமிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தன்னால் வழக்கை எதிர்கொள்ள முடியவில்லை என்றும் வீரலட்சுமி தன்னை வேறு ரூட்டிற்கு அழைத்து செல்ல பார்க்கிறார் என்றும் கூறி சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்நிலையில், சீமானும் […]

You May Like