fbpx

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மேக்கப் போடலாமா….?

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் என்றாலே அவர்களின் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் இருந்ததை விட கர்ப்பம் தரித்த பின்னர் சற்றே அழகாக தென்படுவார்கள். இது இயற்கையான ஒன்றுதான்.

ஆனாலும், கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் மேக்கப் சாதனங்களை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எழுகிறது .அந்த கேள்விக்கு விடை காண, அதற்கான விடையை தேடினால், மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்கள் மேக்கப் போடாமல் இருப்பதே சிறந்தது என்று சொல்கிறார்கள்.

அதாவது, இந்த மேக்கப் பொருட்களில் இருக்கக்கூடிய ரசாயன கலவைகள், கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கக்கூடிய கருவை பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்னர்தான் மேக்கப் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

செயற்கையான சில நிறங்கள் மற்றும் அமிலத்தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கர்ப்பிணிப் பெண்கள் அறவே தவிர்ப்பது மிகவும் நன்று எனவும், செயற்கையான ரசாயன பொருட்களில் இருக்கும் ஒரு சில பொருட்கள், வயிற்றில் இருக்கும் கருவை வளர விடாமல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் கர்ப்பிணி பெண்கள் அழகிற்காக நெயில் பாலிஷ் உள்ளிட்ட, ரசாயன கலவை சேர்ந்த பொருளை பயன்படுத்தினால், அவர்கள் சாப்பிடும் போது அந்த நயில் பாலிசில் இருக்கக்கூடிய ரசாயன கலவை, அவர்களுடைய வயிற்றுக்குள் சென்று, கருவில் இருக்கின்ற குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் மேக்கப் போடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது, மிகவும் நல்லது என்றே சொல்லப்படுகிறது.

Next Post

ஓவர்.. ஓவர்..! "சீமானை தமிழ்நாட்டில் ஒன்னும் பண்ண முடியாது" என்னை திட்டுனாரு..! நடிகை விஜயலட்சுமி வேதனை ..!

Sat Sep 16 , 2023
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். நடிகை விஜயலட்சுமி கடந்த ஆக.28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் […]

You May Like