fbpx

கணினி பயன்பாட்டை குறைத்தால் மன அழுத்தம் குறைந்து விடுமா…..?

நம்மில் பலருக்கு மன அழுத்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, நம்முடைய உடலுக்கு கல்வேறு தீங்குகள் வந்து சேரும், என்பதை யாரும் தெரிந்து கொள்வதில்லை இந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே நாம் என்ன பணியை செய்து கொண்டிருந்தாலும், வாரத்திற்கு ஒரு நாள், அந்த பணிக்கு விடுப்பு கொடுத்து ஓய்வை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து, ஓய்வின்றி வேலை பார்த்து வருவதன் காரணமாகவும், மன அழுத்தம் ஏற்படலாம். அப்படி மன அழுத்தம் ஏற்பட்டால், நிச்சயம் மாரடைப்பு உண்டாகும். அதன் விளைவாக, நம்முடைய உயிரே பறிபோகும் அபாயமும் உள்ளது.

பொதுவாக, கடன் பிரச்சனை அதிகரித்தல், பணிச்சுமை அதிகரித்தல், தனிமையாக உணர்தல் போன்ற பல்வேறு காரணங்களால், இந்த மன அழுத்தம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த மன அழுத்தம் காரணமாக, இரத்த அழுத்தம் உண்டாகி, இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் வழியாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்ப்பதற்கான ஒரு சில எளிமையான வழிமுறைகளை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, காலையில் எழுந்தவுடன், அமைதியான சூழ்நிலையில், தியானம் செய்வது மனதை அமைதியாகவும், இதயத்தை சீராகவும், துடிக்க வைக்கும். அதோடு இது சீரான இரத்த ஓட்டத்திற்கும் உதவி புரிகிறது.

அதேபோல நமக்கு பதட்டமான சூழ்நிலை என்று தெரிய வந்தால், அப்போது மூச்சை மெல்ல, நன்றாக, இழுத்து விட வேண்டும். அப்படி செய்து, மூச்சு பயிற்சி செய்தால், நம்முடைய மனதில் பதற்றம் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படி செய்வதால், மன அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல தனிமையில் இருப்பதன் காரணமாக, மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள், எப்போதும் ஒரு குழுவுடன் இருப்பதை பின்பற்றுவது நல்லது. அதோடு குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களையும் இவர்கள் மேற்கொள்ளலாம். ஆனால், பார்ப்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டில், மன அழுத்தத்தை குறைப்பதற்கான சக்தி உள்ளது. அப்படி குழுவோடு சேர்ந்து நாம் விளையாடும்போது, நம்முடைய குழந்தை பருவத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேபோல நமக்கு அன்றாடம் செய்ய வேண்டிய வேலை பல இருக்கலாம். ஆனால் அதில் கடினமான வேலை, எளிதான வேலை என்று இருக்கும். அவற்றை பார்த்து இரு பிரிவுகளாக பிரித்து அதன் பிறகு நாம் வேலையை செய்ய தொடங்கினால், நமக்கு வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். அதே நேரத்தில், மன அழுத்தமும் ஏற்படாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்து விதமான வழிமுறைகளையும் நாம் பின்பற்றினால், நிச்சயமாக நமக்கு மன அழுத்தம் குறையும். அதிலிருந்து நமக்கு மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, அனைவரும் நிச்சயமாக இதனை பின்பற்றி, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

மகிழ்ச்சி செய்தி...! விவசாய மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.15,000 மானியம்...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Sat Sep 30 , 2023
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.15,000 மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நோக்கம் விவசாயத்திற்கு பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு. பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்குத் தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, […]

You May Like