பொதுவாகவே உணர்வுகள் என்பது மனது சம்பந்தப்பட்டதாக தான் அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. நமது உடல் பல உறுப்புக்களாலானது என்றும் நமது மனம் பல உணர்வுகளாலானது என்றும் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நமது உடல் உறுப்புகளுக்கும் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் .
ஒவ்வொரு மனிதர்களும் உணர்வுகளால் நிரப்பப்பட்டு உள்ளனர். பாலின வேறுபாடின்றி ஆண் பெண் இருவருக்குமே கோபம், அழுகை, விரக்தி, காதல் போன்ற உணர்வுகள் இருக்கிறது. இது போன்ற உணர்வுகளுக்கும் உங்கள் உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு உடல் உறுப்புடன் தொடர்பு இருக்கிறது.
நம்முடைய ஒவ்வொரு உணர்வுகளும் ஒரு உறுப்பில் சேமித்து வைக்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியான உண்மையாகும். நம்முடைய கோபம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. நம்முடைய கவலைகள் வயிற்றில் சேமித்து வைக்கப்படுகிறது. நம்முடைய துக்க உணர்வுகள் நுரையீரலில் சேமித்து வைக்கப்படுகின்றன. மன அழுத்தம் இதயத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. அதிர்ச்சி பயம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு கர்ப்பப்பையில் சேமித்து வைக்கப்படுகின்றன.
இதேபோன்று ஒவ்வொரு உணர்வுகளும் நான் தந்த உடல் உறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமக்கு கோபம் அதிகமாக வரும் போது நமது கல்லீரலை பாதிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுகிறது. கவலை அதிர்ச்சி மற்றும் துக்கம் போன்றவை அதிகரிக்கும் போது குழந்தையின்மை மற்றும் ஃபைப்ராய்டு கட்டி போன்ற பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படுகிறது. எனவே நாம் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு நமது மனமும் அதன் உணர்வுகளும் அமைதியாக இருப்பதும் அவசியம்.