வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை, பத்து ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பனிஷாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி 68 வயது முதியவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த சிறுமியின் பெற்றோர், வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில், அந்த சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இதை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், அந்த சிறுமியிடம் பேசி பழகி உள்ளார்.
அந்த சிறுமியிடம் பேசி, பழகி வந்த அந்த 68 வயது முதியவர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியிடம் பத்து ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளார். இது பல மாதங்களாக தொடர்ந்துள்ளது. அத்துடன், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று, அந்த சிறுமியை அந்த முதியவர் மிரட்டி இருக்கிறார்.
இந்த விவகாரம், கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து, நடைபெற்று வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமியை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறிந்த அந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக, இது பற்றி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அந்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்