fbpx

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கலாமா? உடலுக்கு நன்மையா? தீமையா?

எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகினால், சிறுநீரக பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

எலுமிச்சை நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அது சிலருக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும். யாரெல்லாம் எலுமிச்சை நீரை குடிக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடையில் தினமும் எலுமிச்சை நீர் குடிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. மேலும், எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலை எடையை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. எடை இழப்புக்கு காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் எலுமிச்சை அனைவரின் உடலுக்கும் ஏற்றதல்ல. எலுமிச்சை சிலருக்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். குறிப்பாக வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் பலருக்கு பொருந்தாது. இதை வெறும் வயிற்றில் பருகினால் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிடக்கூடாது, வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிடக்கூடாது?

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. பற்கள் தொடர்பான உணர்திறன் உள்ளவர்கள் எலுமிச்சை சாப்பிடக்கூடாது. உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் எலுமிச்சையை குறைவாக சாப்பிடுங்கள். இது தவிர, எலுமிச்சையின் அதிகப்படியான நுகர்வு எலும்புகளுக்கு ஆபத்தானது.

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

அசிடிட்டி பிரச்னை அதிகரிக்கும்: வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கும். அத்தகையவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எலுமிச்சையில் அதிக சிட்ரிக் அமிலம் உள்ளது. இது அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. குறிப்பாக எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிப்பது அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

பற்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பவர்களுக்கு பல் பிரச்சனைகள் வரலாம். வெறும் வயிற்றில் எலுமிச்ச நீரை குடிப்பது உடல் நலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலம். இது பற்களில் உணர்திறனை அதிகரிக்கிறது. இது பற்களைப் பாதுகாக்கும் எனாமலையும் பலவீனப்படுத்துகிறது.

எலும்புகள் பலவீனமடையும்: தினமும் நிறைய எலுமிச்சை நீரை சாப்பிடுபவர்கள் நன்மைகளை விட அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் உள்ள அமிலம் எலும்புகளுக்கு நல்லதல்ல. எனவே, வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு: சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்கக் கூடாது. இது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். நாள்பட்ட சிறுநீரக நோயில் எலுமிச்சை தண்ணீரையும் குடிக்கக் கூடாது.

Read More: தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!

Baskar

Next Post

டி20 உலகக்கோப்பை!… எங்களுக்கு அநியாயம் நடக்கிறது!… ICC பாரபட்சம் காட்டுவதாக இலங்கை வீரர்கள் புகார்!

Wed Jun 5 , 2024
ICC: எங்களுக்கு மிகவும் அநியாயம் நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையை நியாயமற்றது என இலங்கை வீரர்கள் விமர்சித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த நிலையில் இலங்கை வீரர்கள் போட்டி அட்டவணை தங்களை இறுக்கமாக்கியுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஐசிசியின் போட்டி அட்டவணைப் பட்டியல் நியாயமற்றது என்றும், நீண்ட பயண நேரம் காரணமாக ஏற்கனவே ஒரு பயிற்சி […]

You May Like