PM Modi: அடுத்த 3 ஆண்டுகளில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், புற்றுநோயை எதிர்த்துப் போராட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் 200 புற்றுநோய் மையங்கள் கட்டப்படும், மருந்துகளும் மலிவாக இருக்கும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் மறைந்த தாயார் ஹீராபென் பெயரில் பாகேஷ்வர் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்து நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மருத்துவமனை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குவதை இந்த மருத்துவமனை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
மகாகும்ப மேளா வெற்றிகரமாக மாற்றியதில் சிறப்பாகப் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார். பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவை “ஒற்றுமையின் மகா கும்பமேளா” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த “ஒற்றுமையின் மாபெரும் கும்பமேளாவில்” ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்றும் மோடி கூறினார்.
“இப்போதெல்லாம் ஒரு சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வதையும், மக்களைப் பிரிப்பதையும், தேசத்தையும் நம்பிக்கையையும் பலவீனப்படுத்த அந்நிய சக்திகளிடமிருந்து ஆதரவைப் பெறுவதையும் நாம் காண்கிறோம். பல நூற்றாண்டுகளாக, இந்து மதத்தை வெறுப்பவர்கள் நமது நம்பிக்கைகள், கோயில்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகளைத் தாக்கி வருகின்றனர். அவர்கள் நமது முற்போக்கான மதத்தைக் குறிவைத்து, நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு மத்தியில், தீரேந்திர சாஸ்திரி நீண்ட காலமாக நாட்டில் ஒற்றுமையின் மந்திரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.