கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது..
தமிழகத்தில் இந்து சமயத்துறையின் கட்டுப்பாட்டின் இயங்கும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடர்பட்டுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க கூடாது எனவும் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது..
ஆனால் இந்த கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்..
மேலும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமியின் இந்த மனு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்..