fbpx

அரசு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லையா….? இனி கவலையே வேண்டாம் மாநில அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்….!

பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இனி அரசுக்கு கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதன் மூலமாக தெரியப்படுத்துவதற்கான வசதியை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும், பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் அது பற்றி, அதிகாரிகளிடமோ அல்லது அரசியல்வாதிகளிடமோ சாதாரண மக்களால் நேரடியாக கூற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் விதமாகவே, இந்த திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைவு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை இந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் மூலமாக, அரசு சரி செய்து வருகின்ற சூழ்நிலையில், மாநகராட்சியின் சார்பாக கோவை மாவட்டத்தில் சமீபத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் நேரில் வந்து பங்கேற்றுக் கொள்ள இயலாத நபர்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்காக, தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதே நேரம், பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

அதாவது, தமிழ்நாட்டில், சொத்துவரி விதிப்பு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு என்று அனைத்து விதத்திலான கருத்துக்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும், க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கோவை மாநகராட்சியின் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக பொதுமக்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில், க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து, தங்களுடைய புகார் மற்றும் கருத்துக்களை கூறலாம் என்று மாநகராட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

Vehicle | அந்த இடத்துல நிக்குறது உங்க வாகனமா..? உடனே தூக்கிருங்க..!! இல்லைனா அவங்க தூக்கிருவாங்க..!!

Thu Aug 24 , 2023
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் (Vehicle) ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற வாகனங்களால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி தரப்பிலும், போக்குவரத்து காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீண்ட நாட்களாக […]

You May Like