அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனியை சேர்ந்த மிலானி என்பவர், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்துகள், வருமானங்கள் ஆகியவை குறித்த உண்மை தகவலை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும், எடப்பாடியின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்து போட்டுள்ளார். எனவே அவரை சாட்சியாக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி பெற்ற தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி கடந்த 2 நாளுக்கு முன்பு உத்தரவிட்டு, விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவும் கூறியது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Read more : விஜயின் கடைசி படத்தின் பெயர் “ஜனநாயகன்”…. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!