fbpx

உஷார்.. அதிகரிக்கும் காய்ச்சல், இருமல் பாதிப்பு.. இந்த ஆண்டிபயாடிக் மாத்திரைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்..

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள் , தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..

பொதுவாக மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் இந்த காய்ச்சல் குணமடைய மக்கள் அடிக்கடி ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொள்கின்றனர் என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே மருத்துவர்கள், ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதைத் தவிர்த்து, சிகிச்சையை மட்டுமே வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ காய்ச்சலில் இருந்து குணமடைய மக்கள் இப்போது அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்லாவ் போன்ற ஆண்டி பயாடிக் மாத்திரைகளை எடுக்கத் தொடங்குகிறார்கள்.. அவர்கள் டோஸ் மற்றும் அதிர்வெண்ணைக் கவனிக்காமல் தொடர்ந்து மாத்திரைகளை எடுக்க தொடங்குகின்றனர்.. ஆனால் குணமாக ஆரம்பித்தவுடன் அதை நிறுத்துகின்றனர்.. ஆனால் உண்மையான பயன்பாடு இருக்கும்போதெல்லாம், எதிர்ப்பின் காரணமாக ஆண்டி பயாடிக் வேலை செய்யாது..” என்று தெரிவித்துள்ளது..

தவிர்க்கப்பட வேண்டிய ஆண்டி பயாடிக் மாத்திரைகளின் பட்டியல்

  • அசித்ரோமைசின் (Azithromycin)
  • அமோக்ஸிக்லாவ் (Amoxiclav)
  • அமோக்ஸிசிலின் (Amoxicillin)
  • நார்ஃப்ளோக்சசின் (Norfloxacin)
  • சிப்ரோஃப்ளோக்சசின் (Ciprofloxacin)
  • ஆஃப்லோக்சசின் (Ofloxacin)
  • லெவ்ஃப்ளோக்சசின் (Levfloxacin)
  • ஐவர்மெக்டின் (Ivermectin)

இந்த ஆண்டிபயாடிக் மாத்திரைகளின் அதிகப்படியான பயன்பாடு எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்றும், ஆண்டிபயாடிக்குகளின் உண்மையான பயன்பாடு இருக்கும்போது, ​​எதிர்ப்பு காரணமாக அவை வேலை செய்யாது என்றும் ஐஎம்ஏ எச்சரித்துள்ளது.

வேறு பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், நோயாளிகளிடையே எதிர்ப்பை வளர்த்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமோக்ஸிசில்லின், நார்ஃப்ளோக்சசின், சிப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின், லெவ்ஃப்ளோக்சசின் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Maha

Next Post

ஒரு கவுன்சிலர் செய்யும் காரியமா இது…..? 9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் 5 பேர் அதிரடி கைது……!

Sat Mar 4 , 2023
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட இருவரும் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை சட்ட விரோதமாக செய்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (45) அதிமுகவைச் சார்ந்த இவர் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதோடு இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே போல பிரபாகரன் […]

You May Like