சிமெண்ட் மூட்டை ரூ.40 வரை விலை உயர்ந்து சுமார் ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் பெரும்பாலான இடத்தில் சிமெண்ட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பல வீட்டை கட்டும் நபர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் பல மாதங்களாக சிமெண்ட் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது திடீரென உயர்ந்துள்ளது ரியல் எஸ்டேட் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது டெல்லி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் கூட தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவற்றின் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, செயற்கையாக விலைகளை உயர்த்தி இருப்பது தான் காரணம் என்கின்றனர் சிலர். மேற்கு இந்தியாவில் சிமெண்டின் விலை ரூ. 5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது.
மேற்கு இந்தியாவில் சிமெண்டின் புதிய விலை வரம்பு 50 கிலோ பைக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை உள்ளது. டெல்லியில், விலைகள் ஒரு மூட்டை ரூ.20 அதிகரித்து, பிராண்ட் மற்றும் தரத்தைப் பொறுத்து ஒரு மூட்டைக்கு ரூ.340 முதல் ரூ.395 வரை உள்ளது. தென்னிந்தியாவில், சிமெண்ட் விலைகள் வரலாற்று ரீதியாக குறைவாக இருந்த இடத்தில், டீலர்கள் ஒரு சிமெண்ட் மூட்டைக்கு ரூ.40 வரை விலையை உயர்த்தியுள்ளனர், தற்போதைய விலை 50 கிலோ மூட்டைக்கு சுமார் ரூ.320 ஆக உள்ளது.