fbpx

சூப்பர்…! வீடு கட்ட மானியம் வழங்கும் மத்திய அரசு…! ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது…?

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் இந்தாண்டுக்குள் கட்டிக் கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகளை கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மூன்று தவணையாக பணம் வழங்கப்படும். முதல் தவணையாக 50,000.., இரண்டாவது தவணையாக 1.50 லட்சம், மூன்றாவது தவணையாக 50,000 வழங்கப்படுகிறது. மொத்தம் 2.67 லட்சம் ரூபாயில் 1 லட்சத்தை மாநில அரசு வழங்குகிறது. மீதம் உள்ள தொகை மத்திய அரசு மானியமாக கிடைக்கும்.

இந்த திட்டம் முதன்மையாக அனைவருக்கு வீட்டு வசதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பெற தகுதி கிடையாது. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் https://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

முதலில் pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்‌. அடுத்து இணையதளத்தின் மேல் நீங்கள் ‘Citizen Rating” என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அடுத்து தங்குவதற்கு ஏற்ப விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஆதார் எண்ணை நிரப்பி, check என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ஒரு ஆன்லைன் படிவம் திறக்கப்படும் ன, அதை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, முழுமையான தகவலை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

English Summary

Central government to provide subsidy for house construction…! How to apply online

Vignesh

Next Post

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண் & பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்...! போட்டியில் பங்கு பெற அழைப்பு...!

Sun Dec 29 , 2024
Rs.5000 will be given to men & women between the ages of 17 and 25.

You May Like