2023-24 நிதியாண்டில், அரசு மின்னணு வணிக சந்தை தளம், (GeM), 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 1000 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கும் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த வணிக மதிப்பை கண்டுள்ளது. 2016-17 நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையின் மொத்த வணிக மதிப்பு (ஜிஎம்வி) ரூ.422 கோடியாக இருந்தது.
அரசு மின்னணு சந்தை 2023-24 நிதியாண்டில் 62 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. இது 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 1000 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மின்னணு சந்தை தளத்தில் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் 30 ஜூலை 2024 நிலவரப்படி, 2.26 கோடியைத் தாண்டியுள்ளன.
அரசு மின்னணு சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 1.63 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30ஜூலை2024 நிலவரப்படி, பெண் MSEகள் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ. 35,138 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளன. அரசு மின்னணு சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து 25,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசு மின்னணு சந்தை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டார்ட்-அப்கள் 30ஜூலை2024 நிலவரப்படி GMV இல் ரூ.27,319 கோடிக்கும் அதிகமான ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளன
அரசு மின்னணு சந்தை இணையதளத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தொடர்பான பல்வேறு பிரிவுகளில், சஹாயக் எனப்படும் சான்றளிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களை உருவாக்குவதும், அரசு மின்னணு சந்தை வலைதளத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு உதவும் வகையில், தொடக்கம் முதல் இறுதி வரையிலான சேவைகளை அரசு மின்னணு சந்தை சஹாயக் தளத்தில் வழங்குவதும் ஆகும்.