fbpx

மாஸ்..! பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3…! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு…!

சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் அண்மையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது. இந்தியாவே பெருமைப்படும் தருணமாக அமைந்துள்ள இந்த நிகழ்வுக்கு இயக்குநராக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் வீர முத்துவேல் என்பது அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது.

வீர முத்துவேல் உட்பட பலரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உலகமே இன்று வியக்கும் இந்தியாவின் இந்த சாதனை தமிழர்களும் முக்கிய புள்ளிகளாக இருக்கும் நிலையில், சந்திரயான் குறித்து தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி…

Sat Sep 2 , 2023
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் பிறந்த பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா […]

You May Like