இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது.
சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய விண்கலன்களை தொடர்ந்து இந்தியா, சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.35-க்கு சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவதிட்டமிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள்அதற்கான இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்தனர்.
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் தனது இரண்டாவது முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டில், இறங்கும் கடைசி கட்டத்தில் தோன்றிய சில துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக, சந்திரயான் -2 இன் லேண்டர் மற்றும் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திராயன் 3-யின் நோக்கம் நிலவின்மேற்பரப்பில் லேண்டரை சாஃப்ட்லேண்டிங் மூலம் தரையிறக்கி, அங்குரோவர் எனப்படும் சிறிய வகை ரோபோமூலம் ஆய்வு செய்வது தான். இந்தசந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியவுடன் 6 சக்கரங்களை கொண்ட ரோவரை வெளியே அனுப்பி, சந்திரனில் தனது பணியை மேற்கொள்ளும்.