fbpx

சந்திரனின் 75% தூரத்தை கடந்து விட்டது சந்திராயன்-3……! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்…….!

சில வருடங்களுக்கு முன்னர் சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக சந்திராயன் 2 என்ற விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தோல்வியை சந்தித்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனாலும், மனம் தளராமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மீண்டும் தன்னுடைய நிலவு பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக சந்திராயன்-3 விண்கலம் சமீபத்தில் அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயார் செய்யப்பட்ட இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து புறப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமியை சுற்றி தன்னுடைய சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து, நிலவை நோக்கி நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது.

இதற்கு முன்னதாகவே சந்திராயன் 3 விண்கலம் பூமியை சுற்றி தன்னுடைய சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர, தொடங்கி இருக்கிறது. சந்திராயன் விண்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அதாவது, நாளை நிலவின் சுற்றுப்பாதையில் முழுவதுமாக செல்ல இருப்பதாக கூறி இருந்தது.

அதன் அடிப்படையில், தற்சமயம் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. சந்திராயன் 3 நிலவுக்கு மிக அருகில் இருக்கும்போது இந்த சுழற்சி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று விட்டால், வரும் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Next Post

நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு……! பொதுமக்களுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி டெல்லியில் என்ன நடந்தது……?

Fri Aug 4 , 2023
சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற மோடி சமூகத்தினர் பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு பரப்பும் விதமாக பேசியது தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஒருவர் அந்த மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம் ராகுல் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. இதனால் அவருடைய எம்.பி. பதவி பறிபோனது. ஆகவே […]

You May Like