பொதுவாக, இன்றைய காலக்கட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், இமெயில் மூலம் தங்களது ராஜினாமா கடிதங்களை டைப் செய்து அனுப்புவர். இன்னும் சில நிறுவனங்களில் வெறும் பேப்பரில் டைப் செய்து, அதில் கையெழுத்திட்டு அனுப்புவர். ஒருவர் வேலையை விட்டு வெளியேறும்போது, நிறுவனம், மேலாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ராஜினாமா கடிதம் எழுதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒருவர் எழுதிய ராஜினாமா கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெறும் 7 வார்த்தைகள் தான்.. ‘இந்த வேலை எனக்கானது இல்லை.. நான் வெளியேறுகிறேன்’ என பொட்டில் அடித்தார் போல, ஒரு காகிதத்தில் எழுது வைத்துவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு ரொம்பவே எளிமையான கடிதம், ’ஆளை விடுடா சாமி’ ‘விட்டா போதும் ஓடிடுவேன்’ போன்ற கமெண்ட்களுடன் இந்தக் கடிதத்தை பகிர்ந்துவருகிறார்கள்.
ஒரு பயனர் இவர் வேலைபார்த்த நிறுவனத்தில் எவ்வளவு தொல்லைகளை சந்திருந்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படி ஒரு பணி விலகல் கடிதத்தை கொடுத்திருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலரோ, ஒரு கடிதம் கூட முழுவதுமாக எழுதவில்லை என்றால், அவருக்கு அலுவலகத்தில் என்னெல்லாம் பிரச்சனைகள் இருந்திருக்குமோ, மன வேதனையில் இப்படி செய்திருப்பார் என்றும், வேலையைவிட்டு செல்வதற்கு உயர் அதிகாரிகளிடம் விளையாட்டாக இப்படி செய்திருப்பார் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.