fbpx

அடுத்தடுத்து உயிரிழக்கும் சிவிங்கி புலிகள்…! 10 பேர் கொண்ட குழு அமைத்த மத்திய அரசு…!

சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் குழுவை அமைத்துள்ளது. சிவிங்கிப் புலிகள் அறிமுகம், கண்காணிப்பு, திட்டத்தில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக இந்தக் குழு மத்திய பிரதேச வனத்துறைக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும்.

டெல்லியில் உலக புலிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால் தலைமையிலான இந்தக் குழுவில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் பத்து பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இது தவிர சிவிங்கிப் புலிகள் தொடர்பான ஆலோசனைக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சர்வதேச வல்லுநர்கள் நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். தேவைப்படும் போது இந்த குழுவிடமிருந்து ஆலோசனை பெறப்படும்.

சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதை அடுத்து இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ட்ராலி பேக்கில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்……! பிரபல ஹோட்டல் உரிமையாளர் படுகொலை கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…..!

Sat May 27 , 2023
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி காட் சாலையில் ட்ராலி பேக்கில் கிடந்தனர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த நபர், சென்ற வியாழக்கிழமை முதல் காணாமல் போய்விட்டார் என அவருடைய மகன் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய […]

You May Like