சென்னை அருகே, கொசுவை விரட்டும் இயந்திரத்தால், ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மணலி அருகே, அதிகாலை வேளையில், ஒரு வீட்டிற்குள் தீ பற்றியதால், மூதாட்டி மற்றும் அவருடைய பேரக்குழந்தைகள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, சென்னையை அடுத்துள்ள மணலி பகுதியில், எம்.எம்.டி.ஏ குறுக்கு தெருவில் வசித்து வரும் இணையதள உணவு டெலிவரி ஊழியரான உடையார் என்பவரின் வீட்டில், கொசு விரட்டியின் காரணமாக, ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள், ஒரு மூதாட்டி என்று நான்கு பேர் மூச்சு திணறி பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர்.
இதில் உடையாருக்கு விபத்து உண்டாகி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரை கவனித்துக் கொள்வதற்காக, அவருடைய மனைவி மருத்துவமனையில் இருந்துள்ளார். அதோடு, குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பாட்டி சந்தான லட்சுமி வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், நேற்று இரவு படுக்கை அறையில், கொசு விரட்டி மருந்து கருவியை ஆன் செய்து வைத்து விட்டு, நான்கு பேரும், உறங்கியுள்ளனர். அப்போது திடீரென்று நடு இரவில் கொசு விரட்டி மருந்து இயந்திரத்தில் இருந்து, மின்கசிவு ஏற்பட்டதாகவும், இதனால், தீ விபத்து உண்டாகி புகைமூட்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதன் காரணமாக, உண்டான மூச்சு திணறல் காரணமாக, சந்தானலட்சுமி(60), சந்தியா (10), ரக்ஷிதா(7), சந்தான பவித்ரா (8) உள்ளிட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தகவல் கிடைத்திருக்கிறது.
கொசு விரட்டியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதால், உண்டான தீ விபத்தால், புகைமூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், கதவு திறக்கப்படாததாலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, நான்கு பேரும், சடலமாக கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். தற்சமயம் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டது, எப்படி என்பது தொடர்பான விசாரணையை காவல்துறையினர், முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பான உறுதியான காரணங்கள் விசாரணைக்கு பிறகு தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.