fbpx

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்…! இன்று 39 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌…!

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ வரும் 14-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல்‌ 39 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. ஒருசில இடங்களில்‌ இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரிசெல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌

Vignesh

Next Post

தொடர் விடுமுறை!… சொந்த ஊர் செல்பவர்களுக்காக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Wed Aug 9 , 2023
பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை நாட்களாக உள்ளதால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது போக்குவரத்துறை. சென்னை, கோவை, திருச்சி, […]

You May Like