fbpx

18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ மே 17,18 ஆகிய தேதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 18-ம்‌ தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 3 டிகிரி செல்சியஸ்‌ உயரக்கூடும்‌. இன்று இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால்‌ மீனவர்கள்‌ கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Youtube..!! ’இனி என்ன செய்தாலும் விளம்பரங்களை பார்த்தே தான் ஆக வேண்டும்’..? யூடியூப் போட்ட பலே திட்டம்..!!

Mon May 15 , 2023
ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களை தவிர்த்து விட்டு காணொளியை மட்டும் பயனர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் மட்டுமின்றி யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும். ஆகவே, இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் (Youtube) தளத்தில் தடை செய்யும் வசதியை இப்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். விளம்பரங்கள் இன்றி காணொளிகளை பார்க்க ப்ரீமியம் வசதியை அந்நிறுவனமே வழங்கி வருகிறது. கடந்த […]

You May Like